Janu / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் திங்கட்கிழமை (21) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க கொடியேற்றம் இடம்பெற்றது.
தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , மறுநாள் 14ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , அன்றைய தினம் மாலை கொடியிறக்க திருவிழா இடம்பெறும்.
கொடியேற்ற திருவிழாவின் போது, பெருமளவான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு அங்கப்பிரதட்சணம் உட்பட பல்வேறு நேர்த்திகளில் ஈடுபட்டனர் .
எம்.றொசாந்த்







5 minute ago
8 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
1 hours ago
2 hours ago