2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நவராத்திரி விரத ஆரம்ப நிகழ்வு

Freelancer   / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவராத்திரி பண்டிகை முதல் நாள் சிறப்பு வழிப்பாடுநவராத்திரி விரதம் ஆண்டு தோறும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு நவராத்திரி விரதம் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பமாகிறது. 

ஒக்டோபர் 23 ஆம் திகதி சரஸ்வதி பூஜையும், ஒக்டோபர் 24 ஆம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.

நவராத்திரி பண்டிகை 2023:
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து ஒவ்வொரு நாளும் நவராத்திரியில் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். 9 நாளும் 9 வகையான வாத்தியங்கள் இசைப்பார்கள்.

நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் புள்ளி கோலமிட வேண்டும். முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும். அதேபோல் கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.

 

இராகலை  மேல் பிரிவு தோட்டத்தில் கோயில் கொண்டுள்ள கலைமகள் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் நவராத்திரி விழா ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

ஆ.ரமேஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X