Mayu / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயங்களில் ஒன்றான நிந்தவூர், மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நாளை (22) புதன்கிழமை ஆரம்பமாகிறது.

உற்சவகாலப் பிரதம குரு வித்யா பிரவீணா சிவஸ்ரீ அ. மு. நிஷாந்தன் குருக்கள் தலைமையில், ஆலய குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் முன்னிலையில் வருஷாபிஷேகக் கிரியைகள் நடைபெறவுள்ளன.
தொடர்ச்சியாக ஒன்பது தினங்கள் பகல் அலங்கார உற்சவத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி அன்று தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவடையவுள்ளது.

வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சுந்தரேஸ்வரர் ஆலயத்திலிருந்து பாற்குடப் பவனி இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
இந்த பத்து நாள் திருவிழாக்காலங்களில், தினமும் காலை 10 மணிக்கு கும்ப பூஜையுடன் விழா ஆரம்பமாகி, பகல் ஒரு மணிக்கு அலங்கார உற்சவப் பிரதான பூஜையும் அம்பாளின் வீதியுலாவும் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்குத் தினமும் அன்னதானம் வழங்கப்படும் என ஆலயப் பரிபாலன சபைத் தலைவர் கி. ஜெயசிறில் தெரிவித்தார்.

பத்து தினங்களுக்கான திருவிழாக்களையும் அன்னதானத்தையும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பிரதேசங்களான சம்மாந்துறை, திருக்கோவில், பொத்துவில், ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி, கல்முனை, காரைதீவு, நிந்தவூர் மற்றும் அட்டப்பள்ளம் ஆகிய கிராமங்கள் பொறுப்பேற்று நடத்துகின்றன.
மேற்கூறிய உற்சவ காலங்களில் ஆலயத்திற்கு வருகை தந்து, வழிபாடுகளில் கலந்துகொண்டு அம்பாளின் திருவருளைப் பெற்றுய்யுமாறு பரிபாலன சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வி.ரி.சகாதேவராஜா
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago