2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

மெராயாவில் மஹா கும்பாபிஷேகம்

Editorial   / 2024 ஜனவரி 19 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

நுவரெலியா மாவட்டம். லிந்துலை மெராயா தோட்டம்  அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புணராவர்த்தன பஞ்சகுண்டபக்க்ஷ அஷ்டபந்தன நூதனப் பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா புதன்கிழமை (24) இடம்பெறவுள்ளது.

இதனையொட்டிய கிரியா ஆரம்பம் சனிக்கிழமை (20) காலை 5.00 மணிக்கு மெராயா ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ, வே.முத்துகுமாரக் குருக்கள் தலைமையில் விநாயகர் வழிபாடுடன் ஆரம்பமாகவுள்ளது.

இதை தொடர்ந்து விஷேட பூஜைகள் இடம்பெற்று எதிர்வரும் திங்கட்கிழமை (22) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அடியார்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது. பின்னர் யாக மண்டப விஷேட பூசைகள் இடம்பெற்று

மங்களகரமான சோபகிருது வருடம்  புதன்கிழமை  (24) காலை 6.00 மணியளவில் கங்கா தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு இடம்பெறும்.

இதனை தொடர்ந்து காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வரும் சுப முகூர்த்த சுப வேளையில் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும்  பிரதம குருவான பிரதிஷ்டா பூஷணம்,வேதாகம கலாநிதி, சொற்பொழிவு வேந்தன் யாழ்ப்பாணம் மல்லாவி 

சிவஸ்ரீ. குமார பிரபாகர குருக்கள் தலமையில்  மஹா கும்பாபிஷேகம் பக்தகோடிகள் புடைசூழ ஹரோஹராவுடன்,மேள வாத்தியங்கள் முழங்க நடைபெறும். அத்துடன் பகல் 12 மணிக்கு மகேஷ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X