Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 31 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை நகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழா திங்கட்கிழமை (31) காலை 10.41 முதல் 12.11 மணிவரையான சுப முகூர்த்த வேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
கொடியேற்றத் திருவிழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கலந்து சிறப்பிக்க விருக்கிறார். தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறும் ஐந்தாம் திகதி மாம்பழத் திருவிழாவும், ஆறாம் திகதி திருவிளக்கு பூஜையும், ஏழாம் திகதி பக்தி முக்தி பெருவிழாவும், எட்டாம் திகதி வேட்டைத் திருவிழாவும், ஒன்பதாம் திகதி திருக்கல்யாணத் திருவிழாவும்,பத்தாம் திகதி சப்பரத் திருவிழாவும், இடம் பெறும்.11ம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்று இறுதியாக 12ம் திகதி சனிக்கிழமை காலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுப்பெறும்.
அத்துடன் தினமும் அன்னதானம் வழங்கப்படும் என்றும் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் வேலாயுதபிள்ளை செவ்வேட்குமரன் தெரிவித்தார் . மகோற்சவத்திருவிழா கிரியைகளை மகோற்சவ பிரதம குருவான யாழ்ப்பாணம் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ சி. குககணேசக் குருக்கள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஸ்ரீராமச்சந்திர தவசீலக் குருக்கள் முன்னிலையில் நடாத்தவிருக்கின்றனர்.
வி.ரி.சகாதேவராஜா
20 minute ago
29 minute ago
33 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
33 minute ago
37 minute ago