R.Tharaniya / 2025 செப்டெம்பர் 21 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (21) அன்று காலை 9.30 மணிக்கு விசேட பூஜைகள் இடம் பெற்று கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலைமையிலான குருமார் திருவிழா கிரியைகளை மேற்கொண்டதுடன் சுப வேளையில் கொடியேற்றும் சிறப்பு பூஜைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன.
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவில் இரண்டாம் நாளான
22.09.2025 திங்கட்கிழமை முதல் 7 ம் திருவிழாவான 27.09.2025 வரை உள் வீதியுலாவும், 28.09.2025 வெளிவீதியில் ஞாயிறுக்கிழமை குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 29.09.2025 திங்கட்கிழமை வெண்ணைத் திருவிழாவும், 30.09.2025 செவ்வாய்க்கிழமை துகில் திருவிழாவும், 01.10.2025 புதன்கிழமை பாம்பு திருவிழாவும்,02.10.2025 வியாழக்கிழமை கம்சன் போர் திருவிழாவும், 03.10.2025 வெள்ளிக்கிழமை வேட்டை திருவிழாவும், 04.10.2025 சனிக்கிழமை சப்பறத் திருவிழாவிழாவும், 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும், 06.10.2025 திங்கட்கிழமை சமுத்திர தீர்த்த திருவிழாவும், 07.10.2025 செவ்வாய்க்கிழமை பட்டுத்தீர்த்த திருவிழாவும், 08.10.2025 ஆஞ்சநேயர் மடையும் இடம் பெறவுள்ளது.
திருவிழாவிற்க்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பருத்தித்துறை பிரதேச சபையும் மேற்கொண்டுள்ளதுடன், நிர்வாக ஒழுங்குகளை பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர் அவர்கள் தலைமையிலும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் ஏனைய பணிகளையும் மேற்கொண்டதுடன் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



எஸ் தில்லை நாதன்
13 minute ago
20 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
25 minute ago