2025 ஒக்டோபர் 06, திங்கட்கிழமை

வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 05 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லை நாதன்

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (05) அன்று சிறப்பாக இடம்பெற்றது.

கணபதீஸ்வரர் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு கிரகங்களை மேற்கொண்டு காலை 7.30 மணியளவில் வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்றதனை தொடர்ந்து சரியாக 9.30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் தேருலா வந்தார். முன்னை ஆஞ்சநேயப் பெருமான் செல்ல பின்னே விநாயகப் பெருமான், லக்ஷ்மி தேவியை தொடர்ந்து வல்லிபுரம் சக்கரத்து ஆழ்வார் வலம் வந்தார்.

இன்றைய தேர்த்திருவிழாவில் அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் , பால் காவடி, செடில் காவடி, தீச்சட்டி உட்பட்ட பல்வேறு நேற்றிக்கடன்களை நிறைவேற்றினர். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து ஒழுங்குகளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சங்கம் என்பன மேற்கொண்டிருந்தனர்.  போக்குவரத்துக்காக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருந்தது. குறிப்பாக பருத்தித்துறை மந்திகை போன்ற வழிகளினூடாக ஆலயத்திற்கு வருகை தர முடியும்,

வெளியேறும் பாதையாக வல்லிபுர ஆழ்வார் ஆலய பகுதியிலிருந்து பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் மாவடிச் சந்தியூடாக வெளியேறுவதற்க்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

போக்குவரத்து மற்றும் மக்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளை காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நேரடியாக கண்காணித்து செயல்படுத்தினர். 

ஒருவழிப்பாதை நடைமுறை  நாளை வல்லிபுர ஆழ்வார் தீர்த்தத்திருவிழாவின்போது நடைமுறைப்படுத்தப்படும் என காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் அறிவித்துள்ளார்.

முதலுதவி மற்றும் அவசர சுகாதார வசதிகளும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை முதலுதவி சங்கம்,  மக்கள் முதலுதவி சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டனர். இதேவேளை திங்கட்கிழமை(06) அன்று சமுத்திர திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X