2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

விநாயகர் சஷ்டி பூஜை ...

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 07 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

விநாயகர் சஷ்டி விரதம் வெள்ளிக்கிழமை (05) அன்று ஆரம்பமாகிய விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு,செட்டிபாளையம் சித்தி விநாயகர் ஆலயம், தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார்ஆலயம், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் போன்ற பல ஆலயங்களில் பக்திபூர்வமாக ஆரம்பமாகின.

ஆலயங்களில் இடம்பெற்றபூர்வாங்க கிரியைகளை தொடர்ந்து, விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, விநாயகர்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றன.

இவ்விரதம் கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல், மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரை நடைபெறும்.

விநாயகரின் அருள் வேண்டி பக்தர்கள், 21 நாட்கள் விரதம் இருந்து வழிபடுகின்றமை சிறப்பம்சமாகும்.

இவ்விரதத்தை பிள்ளையார்பெருங்கதை விரதம், பிள்ளையார் கதை விரதம், பிள்ளையார் நோன்பு, எனவும் அழைப்பர், மனித வாழ்வின் தடைகளை நீக்கி, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க விநாயகப் பெருமானை இந்துக்கள் வழிபாடுசெய்து வருகின்றமை வழக்கமாக உள்ளது.

இவ்விரதம் எதிர்வரும் 25ஆம் திகதிதீர்த்தோற்சவ இத்துடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

.சக்தி        


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X