Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, புதுச்செட்டித் தெரு ஸ்ரீராதா கிருஷ்ண ஆலய மகா கும்பாபிஷேக விழா ஆவணி மாதம் 16ம் நாள் (01.09.2022)அன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
மகா கும்பாபிஷேக விழா தினத்தை அறிவிப்பதற்கான கணபதி ஹோம பூஜை கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமையன்று ஆலய தலைவர் ஸ்ரீமான் மஹாகர்த்த தாஸ் அவர்களின் தலைமையில் சிவாசாரியர்காளால் நடத்தப்பட்டது.
இப்பூஜையின்போதே ஆவணி 16இல் மகா கும்பாபிஷேக விழா நடைபெற பகவானின் திருவருள் பாலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த கணபதி ஹோம பூஜையில் ஆலய தலைவரின் அழைப்பின் பேரில் முகத்துவாரம் விஷ்ணுகோவில் தலைவர் தேசமான்ய துரைசாமி செட்டியார், சமூகசேவையாளர் ஆனந்குமார் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
1976ஆம் ஆண்டு சர்வதேச கிருஷ்ண பக்திக் கழக பக்தர்களால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட கிருஷ்ண பக்திக் கழகத்திற்கு இந்தியா, திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தினரால் ஸ்ரீஸ்ரீ ராஜகோபால் மூர்த்தி 1982ல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
1990இல் திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பகவான் கிருஷ்ணருக்கு ராதாராணி விக்கிரகமும், அன்பளிப்பு செய்யப்பட்டது. பிரதிஷ்டா சிரோன்மணி பிரம்மஸ்ரீ விஷ்வநாதக் குருக்கள் கிருஷ்ண பகவானை பிரதிஷ்டை செய்து வைத்ததுடன் 1990இல் ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ண திருக்கல்யாணத்தையும் சிறப்புறச் செய்து வைத்தார்.
188, புதுச் செட்டித்தெருவில் சாதாரண இல்லமாக இருந்த இடம் இறைவன் அருள் பாலிக்கும் ஆலயமாகியது. அதன் பின்னர் ராதா கிருஷ்ணருக்கு ஆலயம் அமைக்கவேண்டும் என்னும் ஆலய தலைவரின் நீண்ட கால கனவினாலும், பக்தர்களின் ஆர்வத்தினாலும் 2013ம் ஆண்டு தைமாதம் ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆலயத்திருப்பணி பக்தர்களின் ஆர்வத்தினாலும், முயற்சியினாலும் முழுமையடைந்து ஆவணி மாதம் 16இல் மகா கும்பாபிஷேக விழா நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
- ஆர். ராஜலிங்கம்
படவிளக்கம்:
கணபதி ஹோம பூஜையில் ஆலய தலைவர் ஸ்ரீமான் மஹாகர்த்த தாஸ், ஆலய செயலாளரும், கோகுலம் சிறுவர் இல்லத் தலைவியுமான ஸ்ரீமதி நந்தராணி தேவி, முகத்துவாரம் விஷ்ணுகோவில் தலைவர் தேசமான்ய துரைசாமி செட்டியார், சமூகசேவையாளர் ஆனந்குமார் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டிருப்பதையும், சிவாச்சாரியார்கள் பூஜை நடத்துவதையும் படங்களில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .