2025 மே 10, சனிக்கிழமை

10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்

Mithuna   / 2023 டிசெம்பர் 13 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர் ஹலசூரில் உள்ள கென்சிங்டன் சிக்னல் சந்திப்பு அருகே திடீரென 10 அடி ஆழத்தில் சிமெண்ட் சாலையில் இராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது.

பரபரப்பான சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் உள்ளூர் அதிகாரிகள் பாதுகாப்புக்காக அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். பின்னர் பொதுமக்கள், வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விடாதபடி சுற்றிலும் பேரிகார்டர் அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு இந்த சிமெண்ட் சாலை போடப்பட்டது. சாலையின் அடியில் உள்ள தண்ணீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நில நடுக்கம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்ப நிபுணர்கள் முழுமையான ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த மே மாதம் பலத்த மழைக்குப் பிறகு நகரின் பிடிஎம் லேஅவுட் பகுதிகளில் 4 அடி பள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X