Ilango Bharathy / 2022 ஏப்ரல் 01 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
100க்கும் மேற்பட்ட தெரு நாய்களை விஷம் கொடுத்து கொலைசெய்து, கிணற்றில் வீசிய சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் சித்திபேட் மாவட்டம் திகுல் கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் நீண்ட காலமாகத் தெரு நாய்களின் தொல்லை அதிகமாகக் காணப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று முன்தினம் (30) அக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து விலங்குகள் நல ஆர்வலரான கௌதம் என்பவர் பொலிஸாரிடம் புகார் அளிக்கவே இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கிராமத்தில் கடந்த 3 மாதங்களில் சுமார் 200 தெரு நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago