Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபரொருவர் இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைத்தளத்தினைப் பயன்படுத்தி சுமார் 100 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த அஜய் என்ற 30 வயதான நபரே இச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும் குறித்த நபர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுடன் பழகி வந்துள்ளதோடு அப் பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை ஏமாற்றி அவர்களது நிர்வாண படங்கள் மற்றும் குளியல் காட்சிகளைகளைப் பெற்று வந்துள்ளார்.
அத்துடன் அவர்களது அந்தரங்க வீடியோக்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார்.
அவரது வலையில் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் மற்றும் அரச பெண் அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் அஜயிடம் சிக்கிய பெண்கள் அவமானத்திற்கு பயந்து பொலிஸாரிடம் புகார் அளிக்காததால் அவர் மேலும் மேலும் பல பெண்களிடம் அத்துமீறி உள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஒரு சில பெண்கள் துணிந்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து அஜயை கைது செய்துள்ள பொலிஸாார் இது குறித்த மேலதிக விசாரணைகளை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago