Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவை சேர்ந்த, 100 வயதைக் கடந்த மூதாட்டி, கன்னி சாமியாக விரதமிருந்து, மலையேறி சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
’’பதினெட்டாம் படியில் ஏறிச்சென்று பொன்னம்பலத்தைப் பார்த்தேன். என் பகவானைப் பார்த்தபோது கண்ணும், மனதும் நிறைந்துவிட்டன’’ என அவர் பரவசத்துடன் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை மாதம் ஆரம்பம் முதலே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பன் கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது.
இந்தநிலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மூந்நானக்குழியை சேர்ந்தவர் பாருக்குட்டி அம்மா. இவர் தனது 100வது வயதில் மாலையிட்டு முதன்முதலில் கன்னிசாமியாக சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துள்ளார்.
தனது பேரன் கிரீஷ், பிள்ளைகளான அம்ருதேஷ், அன்விதா, அவந்திகா என 14 பேருடன் இருமுடி கட்டி மும்பைக்கு வந்தார். அங்கிருந்து டோலி மூலம் சபரிமலை சன்னிதானம் சென்றார் பாருக்குட்டி அம்மா. மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக ஐயப்ப சுவாமியை தரிசித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
100 வயதை கடந்து ஐயப்பனை தரிசித்த அந்த மூதாட்டிக்கு தேவசம்போர்டு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து பாருக்குட்டி அம்மா கூறுகையில், "முன்பே சபரிமலைக்கு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை. நூறு வயதில்தான் சபரிமலைக்குப் போகவேண்டும் என அப்போது தீர்மானித்தேன். அந்த முடிவின்படி இப்போது சபரிமலைக்கு வந்துவிட்டேன்.
பதினெட்டாம் படியில் ஏறிச்சென்று பொன்னம்பலத்தைப் பார்த்தேன். என் பகவானைப் பார்த்தபோது கண்ணும், மனதும் நிறைந்துவிட்டன. சபரிமலைக்கு வரும் வழியில் எனக்கு நிறையபேர் உதவி செய்தார்கள். அவர்களையும் பகவான் பாதுகாக்க வேண்டும் எனப் பிரார்த்தித்தேன். என் பேரன் கிரீஷ்குமாரின் மனைவி ராக்கி இஸ்ரேலில் வேலை செய்கிறார். எனவே பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வரவேண்டும் எனவும் பிரார்த்தித்தேன்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
6 hours ago
13 Jul 2025
13 Jul 2025