2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

11 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தம்

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 11 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் விடிய விடிய காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுக்க பெய்த கன மழையால் சென்னை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு வீதிகள் மற்றும் சுரங்க பாதைகள் வெள்ளத்தில் முழ்கின.  தொடர்ந்து மழையால் வீதிகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. கனமழை முன்னெச்சரிக்கை  காரணமாக அதிகாலை முதல் சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் துரைசாமி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர், வியாசர்பாடி, கணேஷபுரம், ராயபுரம் (ஆர்பிஐ) ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 சென்னையில் பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் அதிக அளவு மழைநீர் தேங்கி உள்ளது. சுரங்கப் பாதைகளில் தேங்கிய நீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .