2024 மார்ச் 28, வியாழக்கிழமை

17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய இராணுவம்

Freelancer   / 2022 ஜனவரி 08 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவுடன், பனிக் காற்றும் வீசி வருகிறது. 

கடும் பனிப்பொழிவு மற்றும் காற்று வீசினாலும் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துபற்றிய வீடியோவை மத்திய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

காஷ்மீரின் குப்வாரா பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதேபோன்று, கெரான் பிரிவில் பனியில் செல்ல கூடிய திறன் வாய்ந்த ஸ்கூட்டரில் ரோந்து செல்லும் பணியிலும்  இராணுவ படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பனிப்பொழிவு இன்று அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதுடன், பனிப்பொழிவு எதிரொலியாக தெளிவற்ற வானிலை காணப்படும் நிலையில், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X