2026 மார்ச் 07, சனிக்கிழமை

19 செயற்கைகோள்களுடன் ரொக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீஹரிகோட்டா;  

19 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-51 ரொக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.

பிஎஸ்எல்வி சி-51 ரொக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 உட்பட 19 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட் டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளன.

இறுதிக்கட்டப் பணிகளான 25 மணி 30 நிமிடம் கொண்ட 'கவுன்ட் டவுன்' நேற்று காலை 8:54 மணிக்கு துவங்கியது. பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் 'அமேசோனியா - 1' செயற்கைக் கோள் ஏவப்படுகிறது. அமேசோனியா-1 செயற்கைகோள் பூமியில் இருந்து 637 கி.மீ தூரத்தில் அதன் புவிவட்டப்பாதையில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் ஆகும்.

இதுதவிர இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் செலுத்தப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .