Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 29 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் மத்திய அரசை கண்டித்தும், 14 கோரிக்கைகளை முன்வைத்தும் சுமார் 10 தொழிற்சங்கங்கள் கடந்த 2 நாட்களாக பொதுவேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் போது ”பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் வெற்நிடங்கள் நிரப்ப வேண்டும், உள்ளிட்ட 14 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் இப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
இவ் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வங்கி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாவும் ஊழியர்கள் வேலைக்கு வராததால் வங்கி பணிகள் முடங்கியுள்ளதாகவும், இதுபோல் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago