A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவனந்தபுரம்
திருவனந்தபுரம் மாநகர மேயராக 21 வயதான, பிஎஸ்சி கணிதவியல் மாணவி ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்றார்.
கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமை யிலான இடதுசாரி கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 34 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும் வென்றன. மற்றவர்கள் 5 இடங்களில் வென்றனர்.
இதையடுத்து மேயர் வேட்பாளராக முடவன்முகல் வார்டில் வெற்றி பெற்ற 21 வயது கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரனை மார்க்சிஸ்ட் கட்சி ஞாயிறன்று அறிவித்தது. திருவனந்தபுரம் ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் இவர் பிஎஸ்சி கணிதவியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
இந்நிலையில் நடைபெற்ற மேயர் தேர்தலில் ஆர்யா ராஜந்திரன் 54 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து திருவனந்தபுரம் மேயராக ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்றுக் கொண்டார்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026