2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

21ஆம் திகதி தமிழகம் செல்வார் அமித்ஷா

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 15 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ., மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா எதிர்வரும் 21ஆம் திகதி  தமிழகம் செல்ல வுள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ., தலைவராக முருகன் பொறுப்பேற்ற தும் வேல்யாத்திரை என ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழக அரசு விதித்தை தடையை மீறி பல இடங்களில் வேல்யாத்திரை துவக்க முயன்ற முருகன் மற்றும் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்யப்பட்டனர்.

தற்போது இந்த நேரத்தில் அமித்ஷா தமிழகம் வரவிரு க்கிறார். இவர் சட்டசபை தேர்தலில் என்ன முடிவுகள் எடுக்க வேண்டும், பிரசார வியூகம் ஆகியன குறித்து கலந்துரையாடவுள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .