A.K.M. Ramzy / 2020 நவம்பர் 23 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் நிவர் புயல் உருவாகும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப் பெறும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தற்போது சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 740 கி.மீ மையம் கொண்டிருக்கும் புயலுக்கு ‛நிவர்'என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்புயல் நாளை மறுநாள் 25ஆம் திகதி பிற்பகலில் மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரை கடக்கும் நேரத்தில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் புயல்காற்று வீசும்.
புயல் காரணமாக சென்னை, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங் களில் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர். மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
22 minute ago
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
32 minute ago