2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

27 மருத்துவ மாணவர்களுக்கு மொட்டையடித்துப் பகிடிவதை

Ilango Bharathy   / 2022 மார்ச் 07 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக விடுதியில் 27 மாணவர்களுக்கு மொட்டையடித்துப் பகிடிவதை செய்யப்பட்டசம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள  பிரபல மருத்துவ பல்கலைக்கழகமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான வீடியோவானது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்தே இச்சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடியோவில் `சுமார் 27 முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு தலையில் மொட்டையடிக்கப்பட்டு அவர்களது கைகள் கட்டப்பட்டு  வரிசையாக அழைத்துச் செல்லும் காட்சி  பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தவே  இது குறித்த விசாரணைக்கு அம் மாநில அரசு உத்தவிட்டுள்ளது.

எனினும் இக் குற்றச்சாட்டை  குறித்த பல்கலைக் கழக நிர்வாகம் மறுத்துள்ளதோடு” முதலாம் ஆண்டு மாணவர்கள் பகிடிவதை  செய்யப்பட்டதாக இதுவரை எந்தப்  புகாரும் வரவில்லை. இந்த மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் அடிக்கடி தலையை மொட்டை அடித்துக்கொள்வார்கள். அதை பகிடிவதைக்கு முடிச்சு போட முடியாது” என  விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .