2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

2ஆவதாக பெண் குழந்தை பிறந்தால் சலுகை

Ilango Bharathy   / 2022 மார்ச் 03 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசு கடந்த 2010ஆம் ஆண்டுமுதல் ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா ‘என்ற திட்டத்தை செயற்படுத்தி வருகிறது.

இத் திட்டத்தின் கீழ் கர்பிணிகளுக்கு பிரசவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் முதல் பிரசவத்துக்கு இத்திட்டத்தின் கீழ் பேறுகால உதவியாக 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இத் திட்டத்தில் மேலுமொரு சலுகையாக 2ஆவதாக பெண் குழந்தை பிறந்தால் அத்தாய்மார்களுக்கும் 5,000 ரூபாய் உதவித்தொகையாக  வழங்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது. 

இச் சலுகை வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி  முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு,  முதல் குழந்தைக்கான உதவித்தொகை  2 தவணைகளாக வழங்கப்படும் எனவும், 2ஆவதாக பெண் குழந்தை பிறந்தால் முழுத்தொகையும் பயனாளிக்கு குழந்தை பிறந்த பின்னரே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .