2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

2ஆவது முறையாக திமுக மாநில மாநாடு தள்ளிவைப்பு

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் 2ஆவது முறையாக திமுக மாநில மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் அக்கட்சித் தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்த திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த கே.என்.நேரு முடிவு செய்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுகவினரை தயார்படுத்தும் வகையில் திமுகவுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் நகரம் என வர்ணிக்கப்படும் திருச்சியில் அக்கட்சியின் 11ஆவது மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

 இந்நிலையில், இந்த மாநாடு மார்ச் 14 ஆம் திகதி திறந்த வெளி மாநாடாக நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தல் திகதி அறிவித்தாலும் திட்டமிட்டபடி திமுகவின் மாநாடு நடக்கும். இதற்கான செலவுத்தொகை கட்சி செலவில் சேர்த்துக் கொள்ளப்படும் என கே.என்.நேரு தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் ஏப்ரல் 6ஆம் திகதி  தேர்தல் நடத்தப்படும் என   தேர்தல் ஆணையம் அறிவித்தது. நடத்தை விதிகளும் உடனடியாக அமுலுக்கு வந்ததால், திமுக மாநில மாநாடு தள்ளி வைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்  அறிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .