2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

300​+ முதியவர்களை வலையில் வீழ்த்திய பெண்: 300+ ஆபாச வீடியோஸ்

Editorial   / 2026 ஏப்ரல் 20 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2010-களின் பிற்பகுதியில், கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் பகுதிகளில் 'அஸ்வதி அச்சு' என்ற பெயர் மெல்லப் பரவத் தொடங்கியது. முதலில் அது ஒரு சாதாரணப் பெண்ணின் பெயராகத் தோன்றினாலும், காலப்போக்கில் அது ஒரு பேராபத்தான "ஏமாற்று பிராண்டாக" மாறியது.

அஸ்வதி அச்சு (சில நேரங்களில் அனுஸ்ரீ, அனு என்றும்) என்ற பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டன. இதற்காக அப்பாவிப் பெண்களின் புகைப்படங்களைத் திருடிப் பயன்படுத்தியுள்ளார். அவர் யாரையும் நேரடியாக அணுகுவதில்லை; மாறாக நட்பு, பரிதாபம், காதல் எனப் படிப்படியாகத் தனது வலையை விரிப்பார்.

தனிமையில் இருக்கும் ஆண்கள், விவாகரத்தானவர்கள், முதியவர்கள் மற்றும் குடும்பப் பிரச்சினைகளில் இருப்பவர்களையே இவர் குறிவைத்தார். "என் வாழ்க்கை முழுவதும் துயரம் நிறைந்தது; உங்களைப் போன்ற ஒரு நல்ல மனிதர் கிடைத்தால் போதும்" என்று பேசி மென்மையாக உரையாடலைத் தொடங்குவார்.

பின்னர் படிப்படியாகப் பண உதவி கேட்க ஆரம்பிப்பார்:

"அம்மாவிற்கு அவசர அறுவை சிகிச்சை..."

"திருப்பித் தந்துவிடுகிறேன், கொஞ்சம் கடன் வேண்டும்..."

"நம் திருமணச் செலவிற்காகப் பணம் தேவை..."

68 வயதுடைய ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஒருவரின் கதை மிகவும் பரிதாபகரமானது. ஊனமுற்ற மகளுடன் வசித்து வந்த அவருக்கு, தரகர் ஒருவரின் மூலமாக அஸ்வதி அறிமுகமாகியுள்ளார். "உங்கள் மகளை நான் பார்த்துக்கொள்கிறேன், நாம் திருமணம் செய்துகொள்ளலாம்" என்று ஆசை வார்த்தை கூறி, அவரிடம் பல்வேறு காரணங்களைச் சொல்லி சுமார் 40,000 ரூபாயைச் சுருட்டியுள்ளார். திருமணப் பதிவு அலுவலகம் வரை சென்றவர், புகைப்படப் பிரதி இல்லை என்பது போன்ற சாக்குப் போக்குகளைக் கூறித் தப்பியோடினார்.

இவ்வாறு சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் இவரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களுடன் நெருக்கமாக இருந்த தருணங்களை ரகசியமாகப் படம்பிடித்து வைத்துக்கொண்டு, அதைக் காட்டி மிரட்டுவதைத் தனது வாடிக்கையாகக் கொண்டிருந்தார். சமூக அவமானத்திற்குப் பயந்து பெரும்பாலானவர்கள் புகார் அளிக்க முன்வரவில்லை. சில உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் இவரது வலையில் வீழ்ந்ததால், அவர்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்திப் புகார்களைத் தடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

தொடர் புகார்களை அடுத்து 2023-ல் பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். ஆரம்பத்தில் வழக்குகளில் இருந்து தப்பிக்க முயன்றாலும், இறுதியில் அஸ்வதி அச்சு கைது செய்யப்பட்டார். விசாரணையில், இவர் ஏற்கனவே பல சைபர் குற்றங்கள் மற்றும் 'ஹனி ட்ராப்' வழக்குகளில் தொடர்புடைய ஒரு தேடப்படும் குற்றவாளி என்பது உறுதியானது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 என்று சொல்லப்பட்டாலும், புகார்களின் அடிப்படையில் காவல்துறையிடம் உள்ள எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இன்று கேரளா முழுவதும் அஸ்வதி அச்சுவின் கதை ஒரு எச்சரிக்கையாகப் பேசப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .