2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

’மே தினத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்’

Freelancer   / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

 இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாரால் விரிவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் இலங்கை பொலிஸாரும், குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் இணைந்து அவசியமான சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கத்தோலிக்க திருச்சபையும் பொதுமக்களும் நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த விசாரணைகள் அமையும் எனவும், மிக விரைவில் விசாரணைகளை நிறைவு செய்து உண்மைகளை வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மக்கள் மற்றும் கத்தோலிக்க சபை எதிர்பார்க்கும் தரத்திற்கு அமையவே இந்த விசேட புலனாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் வலியுறுத்தினார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .