Janu / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நேருபுரம் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கல்குவாரிக்கு எதிராக, அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை(23) கிளர்ந்தெழுந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
திருக்கோவில் பிரதேச சபையின் எவ்வித அனுமதியுமின்றி இக்கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஆர்ப்பாட்ட இடத்திற்கு விரைந்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சு. சசிகுமார் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன் ஆகியோர் நிலைமையினை ஆராய்ந்தனர். மக்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கல்குவாரியானது அவ்விடத்திலிருந்து அகற்றப்படும் என உறுதியளித்தனர்.
இது தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில், “குறித்த இடமானது குளத்திற்கு சொந்தமான அரச காணியாகும். இவ்வாறான இடங்களில் கட்டிடங்களை அமைக்க முடியாது,” என மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர், இக்கல்குவாரிக்கு சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அம்பாறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடம் தொலைபேசி ஊடாக கேட்டறிந்தார். அதற்கு, குறித்த கல்குவாரிக்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இறுதியில், மக்கள் குடியிருப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த சட்டவிரோதக் கல்குவாரி அகற்றப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
வி.ரி. சகாதேவராஜா






2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago