Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 14 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
4 குழந்தைகளைப் பெறும் இளம் பிராமண தம்பதிக்கு ரூ.1 இலட்சம் பரிசு வழங்கப்படும் என்று, மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பண்டிட் விஷ்ணு ரஜோரியா பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவராக நீண்ட காலமாக பதவி வகித்து வருகிறார். இது மாநில அமைச்சருக்கு நிகரான பதவியாகும்.
இந்நிலையில், போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பண்டிட் விஷ்ணு ரஜோரியா பேசியதாவது,
“நாம் நமது குடும்பங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டதால் மதவெறி பிடித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரியவர்களிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. இளைஞர்களிடமிருந்து எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. கவனமாகக் கேளுங்கள், எதிர்கால தலைமுறையின் பாதுகாப்புக்கு நீங்கள்தான் பொறுப்பு. குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்று கொள்ளுமாறு நான் உங்களை (இளம் பிராமண தம்பதிகள்) வலியுறுத்துகிறேன்.
“இதற்கமைய, 4 குழந்தைகளைக் பெற்றுக் கொண்ட இளம் பிராமண தம்பதிகளுக்கு பரசுராம் கல்யாண் வாரியம், ரூ.1 இலட்சம் பரிசு வழங்கும். நான் வாரியத் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படும்.
“கல்விக்கான செலவு தற்போது அதிகமாக உள்ளதாக இளைஞர்கள் அடிக்கடி கூறுகின்றனர். அந்த செலவுகளை எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள். ஆனால் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் இருந்து பின்வாங்காதீர்கள். இல்லையெனில், மதவெறியர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றும் நிலை வரும்” என்றார்.
இந்நிலையில், பண்டிட் விஷ்ணு ரஜோரியாவின் இந்த பேச்சு மாநிலத்தில் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago