Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
4 மாநில தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (03) வெளியாகின. இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) பலத்த அடி கொடுக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட நிலையில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பறித்தது.
தெலுங்கானாவில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மிசோரமில் 3 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலை விட ஐந்து மாநிலங்களிலும் அதிக இடங்களை பிடித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளால் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் பிரதமர் மோடி கூறுகையில் “மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பு இருக்கும்போது, ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பலை என்பது பொருத்தமற்றதாகிவிடும். சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மக்கள் நலன், நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய நான்கு 'சக்திகளுக்கு' அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் செல்பவர்களுக்கு அமோக ஆதரவு கிடைக்கிறது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago