2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

5 ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், 5 ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை" என மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துத்துள்ளார்.

திபியபுரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவத்துள்ளார்.

இதுகுறித்து அவர்மேலும் தெரிவிக்கையில் ”வருகின்ற மார்ச் மாதம் 10 ஆம் திகதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் போது பாஜக வெற்றி பெற்றால் 18 ஆம் திகதி ஹோலி பண்டிகையின் போது இலவச எரிவாயு   சிலிண்டர்கள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில், 3வது கட்ட வாக்குப்பதிவு வருகிற 20 ஆம்  திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X