2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

7 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மூணாறு

அரபுக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியாக, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்றும் விண்ணை ஆக்கிரமித்த கார்மேக கூட்டம் கனமழையை கொட்டித்தீர்த்தது.

இதனால் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சி அளித்தன.இடை விடாமல் பெய்து வரும் அடைமழையினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 இந்தநிலையில் நேற்று மாலை கொக்கையார் பகுதியில் கனமழை கொட்டியது. அப்போது, பூவந்தி மலையடிவாரத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. 500 அடி உயரத்தில் மலையில் இருந்து மண்ணும், பாறைகளும் உருண்டன.

இதில் அடிவாரத்தில் இருந்த 5 வீடுகள் மூழ்கின. மேலும் அந்த வீடுகளில் வசித்த 7 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.  

இதுகுறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் இடுக்கியில் இருந்து பூவந்தி கிராமத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் ஆகியதால், அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இதனால் மீட்பு பணி முடங்கியது. ஆனால், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மீட்பு பணி தொடர்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .