2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

7 மாவட்டங்களில் இணையச் சேவைக்குத் தடை

Ilango Bharathy   / 2022 மார்ச் 07 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் 8 நாட்களுக்கு இணையதள சேவை நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இணையப் பரிமாற்றம் மற்றும் குரல் வழி இணையத் தொடர்பாடல் மூலம் சில பகுதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறலாம் என உளவுத்துறை,  அரசுக்குத்  தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத், உத்தர் தினாஜ்பூர், கூச்பெஹார், ஜல்பைகுரி, பிர்பூம் மற்றும் டார்ஜிலிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் இணைய சேவைக்குத்  தடை விதிக்கப்படுகிறது.

 இத் தடையானது   மார்ச் 7 , 9 ,11 ,12,13, 15 ,16  ஆகிய திகதிகளில்  காலை 11 மணி முதல் நண்பகல் 3.15 மணி வரை  விதிக்கப்படவுள்ளது.

எனினும் தொலைபேசி அழைப்பு   , குறுஞ்செய்தி மற்றும் செய்தித்தாள்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை”  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .