2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

70ஆவது வயதில் குழந்தை பெற்ற பாட்டி

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத் :

குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, தன் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கட்ச் பகுதியைச் சேர்ந்த வால்ஜிபாய் ரபாரி, 75, அவருடைய மனைவியே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.இத்தம்பதிகள் திருமணமாகி 45 ஆண்டுகளாகின்றன.

குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அவர்களுக்கு தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில், செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றெடுக்க அவர்கள் முடிவு செய்தனர்.  அதன்படி, புஜ் பகுதியில் உள்ள  செயற்கை கருவூட்டல் மருத்துவமனையை அணுகினர்.. 'இந்த வயதில் குழந்தை பெற்றெடுப்பது மிகவும் ஆபத்தானது' என, டொக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

'இறப்பதற்கு முன் ஒரு குழந்தைக்கு தாயாக விரும்புகிறேன்' என, அந்த பாட்டி உறுதியுடன் கூறினார். அதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் மாதவிடாய் ஏற்படுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது காரணமாக சுருங்கிய கர்ப்பப்பை, அறுவை சிகிச்சையால் விரிவுபடுத்தப்பட்டது.

இவ்வாறு சில மாதங்கள் நடந்த சிகிச்சைகளுக்குப் பின் செயற்கை முறையில் கருவூட்டல் நடந்தது.  இந்த வயதில், அதுவும் முதல் முயற்சியிலேயே, அந்த முதிய தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு லாலோ என அதற்கு பெயரிட்டுள்ளது. .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .