2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

73ஆவது குடியரசு தினம் இன்று

Freelancer   / 2022 ஜனவரி 26 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டாடப்படுகின்றது.

இதை முன்னிட்டு டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.  

தலைநகரில் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் கணிகாணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 

மாநகரம் முழுவதும் முக அடையாளம் காணும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.  

குடியரசு தின விழா நடைபெறும் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  துப்பாக்கி ஏந்திய பொலிஸாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

குடியரசு தின விழா காலை 10 மணியளவில் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .