2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

7வது முறையாக பதவியேற்கும் முதல்வர் நிதிஷ் குமார்!

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 11 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடைபெற்ற பிஹார் தேர்தலில்  பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் நிதிஷ் குமார் 7வது முறையாக முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்.

நிதிஷ் குமாரின் ஜேடியுவுக்கு தனிப்பட்ட முறையில் தோல்விதான் என்றாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி யின் பலத்தால் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.

இந்நிலையில் பிஹார் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்த பிரதமர் மோடி தொடர் ட்வீட்ல் கூறியிருப்பதாவது:

உலகிற்கு ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பிஹார் மக்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஜனநாயகம் எப்படி வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பிஹார் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது.

 

 

பிஹாரில் ஒவ்வொரு குடிமகனின் ஒவ்வொரு பகுதியின் சமச்சீரான வளர்ச்சியையும் உறுதிசெய்கிறேன். இன்னும் முழுமையான அர்ப்பணிப்புடன் நாங்கள் உங்களுக்காகப் பணியாற்றுவோம்.பிஹார் இளைஞர்கள் புதிய பத்தாண்டை  தொடங்கிவிட்டதாக தெளிவுபடுத்தி விட்டார்கள்.  

பிஹாரின் ஒவ்வொரு வாக்காளரும், தங்கள் ஆசை, வளர்ச்சி என்பதையே  காட்டிவிட்டனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு என்.டி.ஏ அரசின் நல்லாட்சி பிஹாரின் கனவுகள் என்ன, பிஹாரின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை காட்டியுள்ளது, என்றார் மோடி.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .