Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 23 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
8 பேர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தின் பீர்பூம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணை தலைவராக இருந்தவர் பாது ஷேக். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் நேற்றைய தினம் (22) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ஷேக் மீது வெடிகுண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான போக்டுய் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் அவரது கொலை காரணமாக அக் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதன்போது வன்முறையில் ஈடுபட்ட கும்பலொன்று அப்பகுதியிலுள்ளபல வீடுகளுக்கு தீ வைத்தது. இதில் 8 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago