A.K.M. Ramzy / 2021 மார்ச் 07 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாஸ் அறிவித்துள்ளார். மேலும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி தற்போது கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. இதுகுறித்து அந்த கட்சி தலைவரான நடிகர் கருணாஸ் கூறியதாவது:-கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுடைய முக்குலத்தோர் புலிப்படை கட்சியை அங்கிகரித்து ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியை ஒதுக்கினார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் 12 அம்ச கோரிக்கைகளை கடந்த 4 ஆண்டுகளில் 19 முறை சட்டமன்றத்தில் நான் பேசி இருக்கிறேன்.எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேசிய தெய்வீக யாத்திரை நடத்தி இருக்கிறேன். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூவத்தூரில் நம்பிக்கை கொடுத்தார்கள். ஆனால் கடைசி நிமிடம் வரை எங்களை நம்ப வைத்து, கழுத்தை அறுத்து அரசியல் அனாதையாக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. சதி செய்திருக்கிறது.
இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஒரு சில சமுதாயத்தை மட்டும் கையில் எடுத்து இருக்கிறார். 358 சமுதாய மக்கள் இருக்கிறபோது அரசியல் உள்நோக்கத்துக்காக, ஆதாயத்துக்காக ஒரு சில சமுதாயத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்.எனவே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுகிறது.
17 minute ago
38 minute ago
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
38 minute ago
44 minute ago
49 minute ago