2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அசாமில் மீட்கப்பட்ட மரடோனாவின் கடிகாரம்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 12 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல காற்பந்து வீரரான மரோடோனா கடந்த வருடம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவருடைய மறைவிற்குப் பின்னர்  டுபாயிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் பாதுகாப்பில் மரோடோனாவின் கை கடிகாரமும், பிற பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அண்மையில்  மரடோனாவின்  கைக்கடிகாரம் ஒன்று, அந்நிறுவனத்தில் இருந்து திருடப்பட்டமை தெரியவந்தது. 

இதனையடுத்து இது குறித்து அந்நாட்டுப் பொலிஸார் நடத்திய விசாரணையில், அக் கைக்கடிகாரத்தை குறித்த நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்த  இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாசித் ஹூசைன் என்பவர்  திருடிவிட்டு இந்தியாவிற்குத்  தப்பி சென்றுள்ளமை தெரியவந்தது. 

இந்நிலையில் மத்திய புலனாய்வுத்துறை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்நபரை  அசாம் பொலிஸாரால் கைது செய்துள்ளதுடன் அக் கைக் கடிகாரத்தையும் மீட்டுள்ளனர்.

இக் கைக் கடிகாரம் இந்திய மதிப்பில் 20 இலட்சம்  ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .