A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாணியம்பாடி
தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன், விரைவில் மக்களைச் சந்திப்பேன், மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என வாணியம்பாடியில் வி.கே.சசிகலா கூறினார்.
திருப்பத்தூர் மாவட்ட எல்லையான லட்சுமிபுரம் அருகே வி.கே.சசிகலாவின் கார் வந்தபோது அமமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட வி.கே. சசிகலா வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச் சாவடிக்கு வந்தபோது, அமமுக திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம், ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் தென்னரசு, மாவட்டப் பொருளாளர் கண்ணபிரான் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் வி.கே.சசிகலா கூறியதாவது:
''தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன், அதிமுக அலுவலகத்துக்குச் செல்வீர்களா என நிறைய பேர் கேட்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்கப்போகிறது என்று.
தொண்டர்களின் உற்சாக வரவேற்பைக் கண்டு நெகிழ்ச்சி அடைகிறேன். தொண்டர்களின் அன்புக்கும், மக்களின் அன்புக்கும் நான் எப்போதுமே அடிமை. எம்ஜிஆர் கூறியதைப்போல, ‘அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கும் நான் அடிமை, கொண்ட கொள்கைக்கும் நான் அடிமை’, தமிழ் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் என்றுமே நான் அடிமை’.
அடக்குமுறைக்கு என்றுமே நான் அடிபணிய மாட்டேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அவசர, அவசரமாகத் திறக்கப்பட்டது, அதன்பிறகு அதே அவசர கதியில் மூடப்பட்டது ஏன்? என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். என் வாகனத்தில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்திருப்பது அவர்களது பயத்தைக் காட்டுக்கிறது.
அதிமுகவைக் கைப்பற்றுவீர்களா? எனச் சிலர் கேட்கின்றனர். மிக விரைவில் உங்களையும் (செய்தியாளர்கள்) மக்களையும் நேரில் சந்திப்பேன். அப்போது சொல்கிறேன், அதுவரை பொறுத்திருங்கள் என்றார்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026