2026 மார்ச் 07, சனிக்கிழமை

அடுத்த கட்ட அரசியலை ஆரம்பிக்கும் வசுந்தரா ராஜே

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா  மூத்த தலைவருமான, வசுந்தரா ராஜே சிந்தியா, பிரமாண்ட பேரணி மூலம், அடுத்த கட்ட அரசியல் அத்தியாயத்தை துவக்க திட்டமிட்டுள்ளார்.

முதலாவதாக, தன், 68 வது பிறந்த நாள் மற்றும் பெண்கள் தினத்தை முன்னிட்டு, மார்ச், 8இல், 'தேவ் தர்ஷன் யாத்திரை' என்ற பிரமாண்ட ஊர்வலத்தை, ராஜஸ்தானில் நடத்த உள்ளார்.

இதன் வாயிலாக, தன் அரசியல் செல்வாக்கு இன்னும் குறையாமல் உள்ளது என, பா.ஜ., மேலிடத் தலைவர்களுக்கு உணர்த்துவதே அவர் திட்டம். ஏனெனில், கடந்த மாதம், 90 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., 37ஐ மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 50 இடங்களை வென்றது.

இதற்கு, தேர்தல் நடவடிக்கைகளில், வசுந்தரா கட்டளைப்படி, அவர் ஆதரவாளர்கள் ஈடுபாடு காட்டாததே காரணம் என, கூறப்படுகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ள, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், தன்னை முதல்வர் வேட்பாளராக, பா.ஜ., மேலிடம் அறிவிக்க வேண்டும் என, வசுந்தரா எதிர்பார்க்கிறார்.

அதற்காகவே, அடுத்த மாதம், ரத ஊர்வலம் நடத்தி, தன் ஆதரவை காட்ட உள்ளார். அது மட்டுமின்றி, ஏப்ரலில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடத்தவும், வசுந்தரா திட்டமிட்டுள்ளார். இதற்கு, அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் உள்ள கருத்து வேறுபாட்டை சரிசெய்து கொள்ளலாம் என்பதும் அவர் திட்டம்.வசுந்தரா தன் வலிமையால், பா.ஜ., மேலிடத்தை பணிய வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .