2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

’அட்டகாசம் புரிந்த எம்.பிக்கள் இடைநிறுத்தம்’

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 30 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

பாராளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடரின்போது ராஜ்யசபாவில் விதிகளை மீறி அடாவடியில் ஈடுபட்டதற்காக, சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்தக் கூட்டத் தொடர் முழுவதற்கும் சபைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற  குளிர்கால கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமானது.

ராஜ்யசபாவில் தலைவர் வெங்கையா நாயுடு துவக்க உரையாற்றி, கூட்டத் தொடரை துவக்கி வைத்தார். இதையடுத்து, பாராளுமன்ற  விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, 256 சட்டப் பிரிவின் கீழ், கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது, ஆகஸ்ட் 11ல் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 12 பேரை, இந்த தொடர் முழுதும் 'இடைநிறுத்தம் செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இதுவரை இல்லாத வகையில் கடந்த மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளன்று, ராஜ்ய சபாவின் கண்ணியத்தையும்,கௌரவத்தையும் குலைக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் அமளியில் ஈடுபட்டனர். திட்டமிட்டு சபை காவலர்களை தாக்கி, சபையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டனர்.

இதற்காக அவர்களை ராஜ்யசபா அலுவல் சட்ட விதிமுறை 256 பிரிவின் கீழ், இந்த கூட்டத் தொடர் முழுதும் இடைநிறுத்தம் செய்யக் கோரி இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு வாயிலாக தீர்மானம் நிறைவேறியது. அப்போது சபையை நடத்திய ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், 12 எம்.பி.,க்கள் இடைநிறுத்தம் செய்யப்படுவதாக கூறி, சபை நாளை வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .