2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அணுக்கழிவுகளை சேமிக்க எதிர்ப்பு

Freelancer   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல்லை மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக் கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

இதற்கு அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவோற் மின்னுற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 3 மற்றும் 4ஆவது அணு உலைகளை அமைக்க நிர்மானப் பணிகள்  நடைபெற்றுவருகின்றன. இந்த அணு உலைகளில் மின் உற்பத்தி 2023-24ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .