Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 13 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாதவிடாய் காலத்தில் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது குறித்து பல முன்முடிவுகள் இருந்தாலும், மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் அமைந்துள்ள கோயிலான அன்னபூர்ணா தேவி கோயில் பெண்களின் உரிமைக்காக பாடுபடுவதில் கவனம் செலுத்துவதாக நம்பப்படுகிறது. மற்றவற்றிலிருந்து இந்த கோயிலை தனித்துவமாக்குவது என்னவென்றால், இங்கு பெண்களுக்கு அணையாடை (சானிட்டரி நாப்கின்கள்) நன்கொடையாக வழங்கப்படுகின்றன. உலகிலேயே இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.
அன்னபூர்ணா தேவி கோயிலில் வழங்கப்படும் அனைத்து அணையாடைகளும், மாதவிடாய் கப்களும் (Menstrual Cups) போபாலின் குடிசைப் பகுதிகள் மற்றும் பெண்கள் அரசுப் பள்ளிகளில் விநியோகிக்கப்படுவதாக போபாலில் இயங்கும் என்ஜிஓ-வான ஹெய்செல் அறக்கட்டளையின் இயக்குநர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் , “அணையாடைகளை ( சானிட்டரி நாப்கின்) விநியோகிக்கும் இந்த யோசனை அசாமின் கவுகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோயிலில் இருந்து உருவானது ஆகும். அங்கு புகழ்பெற்ற அம்புபாச்சி திருவிழாவானது, மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார நடைமுறைகளில் பணியாற்றுவதாக அறியப்படுகிறது.
தெய்வங்களுக்கு மக்களால் வழங்கப்படும் பூ மாலைகள் மறுநாள் குப்பைகளில் வீசப்படுகின்றன. இதனால் யாருக்கும் பயனில்லை. மக்கள் பணத்தில் பயனுள்ள ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நம்பினேன். இந்த முயற்சியின் மூலம் அன்னபூர்ணா தேவி கோயிலுக்கு இதுவரை 11,000க்கும் மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை மக்கள் வழங்கியுள்ளனர்” என்றார்.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 (NFHS) படி, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 42 சதவீதம் பேர் மாதவிடாய் நேரத்தில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். வயது வரம்பு அதிகரிக்கப்பட்டால், மாதவிடாய் சுழற்சியின் போது சானிட்டரி நாப்கின் தேவைப்படும் பல பெண்களும் இதில் அடங்குவர். ஆகவே, போபால் அன்னபூர்ணா கோயிலில் மூன்று வகையான நன்கொடைகள் வழங்கப்படுகின்றன.
கோதுமை மற்றும் பருப்பு போன்ற தானியங்கள் வழங்கப்படும். இரண்டாவது வகை ‘வித்யா தான்’- அதாவது நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் குழந்தைகளின் கல்விக்காக புத்தகங்கள், நோட்டுகள், பேனாக்கள் மற்றும் பிற எழுது பொருட்களை வழங்குவது வழக்கம். இறுதியானது ‘ஆரோக்யா தான்’, இதில் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மாதவிடாய் கப்கள் நன்கொடையாக வழங்கப்படுகின்றன என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago