A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி :
இயற்கையின் அருட்கொடை இமயமலையில் ஏராளமான பனிப்பாறைகள் இருக்கின்றன. இந்த பனிப்பாறைகள்தான் கோடானக்கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றன.
ஆனால் உலக வெப்பமயமாதல் என்ற அநியாயம் ஓசையின்றி அரங்கேறி வருவதால் இந்த பனிப்பாறைகள் வேகமாக, அதுவும் இரு மடங்கு வேகமாக உருகத்தொடங்கி இருக்கின்றன.
21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இமயமலையில் மேற்கில் இருந்து கிழக்கு வரை 2 ஆயிரம் கி.மீ. தொலைவில், ஏறத்தாழ 650 பனிப்பாறைகளின் செயற்கைக்கோள் படங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களின் படங்களைக்கொண்டு, 20ஆம் நூற்றாண்டில் இமயமலை பனிப்பாறைகளின் நிலைமையை ஆராய்ந்துள்ளனர்.
இமயமலை பனிப்பாறைகள் 2000ஆம் ஆண்டில் இருந்து சுமார் அரை அடி அளவுக்கு இழந்து வருகின்றன. இது 1975 முதல் 2000ஆம் ஆண்டு வரையிலான உருகும் அளவை விட இரு மடங்கு ஆகும். இந்த கால இடைவெளியில் இமயமலை பனிப்பாறைகள் எவ்வளவு வேகமாக உருகுகின்றன என்பதற்கான தெளிவான படம் இது என்கிறார், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவரும், ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான ஜோசுவா மாரர்.
பனிப்பாறைகள் உருகுவது சீராக நடைபெற்று வருகிறது. இதற்கு முதன்மையான காரணம், வெப்ப நிலை உயர்ந்து வருவதுதான். வெப்ப நிலை இடத்துக்கு இடம் மாறுபடும். ஆனால் 2000-ம் ஆண்டில் இருந்து 2016 வரை, வெப்ப நிலையானது 1975 முதல் 2000 வரையில் இருந்ததை விட சராசரியாக ஒரு செல்சியஸ் அதிகமாக இருந்தது.
13 minute ago
19 minute ago
24 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
24 minute ago
52 minute ago