2025 மே 10, சனிக்கிழமை

அதிசய கிணறு

Mithuna   / 2023 டிசெம்பர் 19 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி ஊராட்சியில் உள்ளது ஆயன்குளம் அதிசய கிணறு. ஒவ்வொரு மழை, வெள்ளப்பெருக்கின் போது பல ஆயிரம் கனஅடி உபரி நீர் இந்த கிணற்றுக்கு அனுப்பப்படும்.

ஆனால் அந்த கிணறு மட்டும் நிரம்பி வழிந்ததே இல்லை என்கிறார்கள். இது அதிசயம் என சொல்லி வந்தனர். அது போல் இந்த முறையும் குமரி கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் 1 லட்சம் கன அடி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந் நிலையில் ஆயன்குளம் அதிசய கிணற்றுக்குள் பல ஆயிரம் கன அடி நீர் திருப்பி விடப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அனுப்பிய நீரையெல்லாம் உள்வாங்கிக் கொண்டே இருக்கிறது. அதிலும் ஊரே வெள்ளக்காடாக காட்சியளிக்கும் போது இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. அதனால் இதை அதிசயமாகவே பார்க்கிறார்கள்.

இந்த வெள்ளம் என்றில்லை, கடந்த 2021 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் கிணற்றுக்குள் சென்றது. அப்போதும் கிணறு நிரம்பவில்லை.

இந்த அதிசய கிணறு குறித்து ஆய்வு நடத்த ஐஐடி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அந்த அதிசய கிணறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50- க்கும் மேற்பட்ட கிணறுகளில் நீரில் இயங்கும் கேமராக்களை செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகள் அதிகமாக இருக்கிறது. மழை நீரில் உள்ள ஆக்ஸிஜன் சுண்ணாம்பு பாறைகளில் ரியாக்ஷன் ஆகி அதில் துவாரங்களை உருவாக்குகிறது. அவை நாளடைவில் மிகப் பெரிய குகைகளாக மாறியது தெரியவந்தது. சில கிணறுகளில் கால்வாய் போன்று உருவாகியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


இந் நிலையில் கடந்த ஆண்டு தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் ட்ரோன் இயந்திரங்களை இறக்கி ஆய்வு செய்தனர்.

 

4 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றாலே கிணறு நிரம்பிவிடும், ஆனால் கிணறு நிரம்பாததற்கு சுண்ணாம்பு பாறைகளால் ஆன குகைகள்தான் காரணம். பாறைகளை மழைநீர் துளைத்து குகைகளாக மாற்றுகிறது. இதனால் கிணற்றில் பூமிக்கு அடியில் நிலத்தடி நீர் ஓடைகள் உருவாகியிருக்கின்றன. நெட்வொர்க் போல் 50 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்த நிலத்தடி நீர் பாதைகள் உருவாகியுள்ளன. பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது. இதனால் சுற்றுபுறத்தில் இருக்கும் கிணற்றின் நீர் மட்டம் உயர்ந்து கொண்ட போகிறது. இவ்வாறு ஐஐடி ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X