A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை;
கொரோனாவில் இருந்து மீண்ட சசிகலா, சென்னையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள போதிலும், தமிழக அரசியல் களத்தை உற்றுநோக்கி வருகிறார். மருத்துவர்கள் அறிவுரைப்படி 10 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு தனது ஆதரவாளர்களையும், அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு, தீவிர அரசியலில் ஈடுபட அவர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்ற அவர் பெங்களூர் அருகே தனியார் சொகுசு விடுதியில் ஒருவாரம் தனிமைப் படுத்திக் கொண்டார். பின்னர் சென்னைக்கு வந்தார்.
சசிகலாவின் வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவரது வருகைக்கு முன்பும், வந்த பிறகும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவின் வருகைஅதிமுகவில் மட்டுமல்லாமல் பிற கட்சியினர் மத்தியிலும் முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது.
கடந்த 6 நாள்களாக ஓய்வில் இருக்கும் சசிகலா, மேலும் 4 நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த வாரம் முதல் நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago