A.K.M. Ramzy / 2021 மார்ச் 02 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. 41 இடங்களில் போட்டியிட்டு, 29 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்த தே.மு.தி.க. 7.9 சதவீத வாக்குகளையும் கைப்பற்றியது.
ஆனால், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் 3ஆவது அணியாக உருவெடுத்த மக்கள் நலக்கூட்டணிக்கு தே.மு.தி.க. தலைமை தாங்கியது. 104 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கிய தே.மு.தி.க. ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பராளுமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க., தொடர்ந்து அந்தக் கூட்டணியிலேயே நீடித்து வருகிறது. நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை வழங்கியுள்ளது.
ஆனால், பா.ம.க.வுடன் திரை மறைவு பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தொடங்கியபோதே, கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும், தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அ.தி.மு.க. அதை கண்டுகொள்ளவில்லை.ஆனால், பா.ம.க.வுடன் கடந்த மாதம் 27 ஆம் திகதி கூட்டணி உடன்படிக்கை செய்து கொண்ட நிலையில், அன்று இரவு தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வருவதாக அ.தி.மு.க. தூது அனுப்பியது. அதை தே.மு.தி.க. கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் அதிமுக - தேமுதிக கட்சிகள் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதிமுக - தேமுதிக கட்சிகள் இடையே சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று மாலை மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago