A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை;
தேர்தல்திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்தார்.
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தலைமையில் கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனியாக நிற்கின்றன. அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமார் அதிலிருந்து வெளியேறியதாக அறிவித்துள்ளார். அதேபோன்று திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே கட்சியும் வெளியேறியுள்ளது.
அதிமுக கூட்டணிக்குள் வர வன்னியருக்கு 20% உள் இட ஒதுக்கீடு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி என ராமதாஸ் கூறினார். 10.5% உள் ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட்டு, பாமகவைக் கூட்டணியில் தக்கவைத்தது அதிமுக தலைமை.
10.5% உள் ஒதுக்கீடு காரணமாக சந்தோஷத்தில் இருந்த பாமக தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் 23 தொகுதிகள் பேசி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது அதிமுக தலைமை. இதை அன்புமணி ராமதாஸும் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.
கூட்டணி உறுதியானது சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகளும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொண்டனர்.
8 minute ago
35 minute ago
56 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
35 minute ago
56 minute ago
6 hours ago