2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அத்துமீறி பறந்த பாகிஸ்தான் ட்ரோன்கள் 82 பறிமுதல்

Freelancer   / 2023 நவம்பர் 15 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை இந்திய எல்லைப் பகுதிகளில் அத்து மீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  

கடந்த 2019 முதல் இதுவரை இந்திய எல்லைப் பகுதிகளில் அத்து மீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 593 முறை எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ட்ரோன்கள் வாயிலாக ஆயுதங்கள், போதைப்பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.

பாகிஸ்தானின் ட்ரோன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ட்ரோன் தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாகவும் பஞ்சாபுக்குள் ட்ரோன்கள் வாயிலாகபோதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க அந்த மாநில பொலிஸார்  சிறப்பு படையை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X