A.K.M. Ramzy / 2020 நவம்பர் 15 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழகம் வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்துமென பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.
அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக கூறப்பட்டாலும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், அமித்ஷாவின் வருகை என்பது ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் வேல் யாத்திரை நடத்துவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வேல் யாத்திரையை தொடர்வோம் என பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அமித்ஷா தமிழகத்துக்கு வருகை தந்தாலும், வேல் யாத்திரையில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .