2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அம்பானியின் வீட்டுக்கு முன், மர்மநபர்கள்!

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 09 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை :

மும்பையிலுள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு, மர்மமான பைகளுடன் இரண்டு நபர்கள் செல்வதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, நேற்று அவரது வீட்டுக்கு வெளியே பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பிரபல தொழிலதிபரும், 'ரிலையன்ஸ்' குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி அடுக்குமாடி சொகுசு குடியிருப்பில், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.பெப்ரவரியில் இந்த வீட்டுக்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரது வீட்டுக்கு சந்தேகத்துக்குரிய இரண்டு நபர்கள், மர்மமான பைகளுடன் செல்வதாக பொலிஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு வெளியே பொலிஸார்  குவிக்கப்பட்டனர்.

இது குறித்து மும்பை பொலிஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முகேஷ் அம்பானியின் வீட்டு முகவரி குறித்து, கால் டெக்சி சாரதியிடம் இரண்டு நபர்கள் தகவல் கேட்டுள்ளனர். அவர்களிடம் மர்மமான பைகள் இருந்துள்ளன. சந்தேகம் ஏற்பட்டதால் பொலிஸாருக்கு அந்த சாரதி தகவல் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பானி வீட்டைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு 'கேமரா'க்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .